ஆந்திரா வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புரபேஷனரி அதிகாரி
மொத்த காலியிடம்: 400
கல்வித்தகுதி: பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ. ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் ஐ.பி.பி.எஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் பர்சனல் செலக்ஷன் நடத்திய பொதுத் தேர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 141 மதிப்பெண்களும், ஒபிசி பிரிவினர் 151 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2012
மேலும் தேர்விற்கான கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் அறிந்துகொள்ள http://andhrabank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment