Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, September 9, 2012

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 19 கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கடலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், காலியாக உள்ள 19 கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 19 கணினி உதவியாளர் பணியிடங்களை தனியார் நிறுவனம் மூலம் நிரப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் கணினி உதவியாளர் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரிய பதிவு பெற்ற வேலை வாய்ப்பு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள், மூடி முத்திரையிட்ட உறைகளில் வரவேற்கப்படுகிறது.
தகுதிகள்:1.8.12 அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும், பி.எஸ்.சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பி.சி.ஏ., (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) அல்லது முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்(எம்.சி.ஏ).
முகவரி: பதிவு பெற்ற தனியார் வேலை வாய்ப்பகத்தில் இருந்து மூடி முத்திரையிட்ட உறைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர், (ஊரக வளர்ச்சி பிரிவு), கடற்கரை சாலை, பழைய நாட்டாண்மை கழக கட்டடம், கடலூர்-600 001.
கடைசி தேதி: 10.9.2012 மாலைக்குள் வரவேற்கப்படுகிறது.
மாத தொகுப்பூதியம்: ரூ.7,500.
கணினி உதவியாளர்கள் கடலூர் மாவட்டத்தில் வசிப்பவராகவும், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment