Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Thursday, September 13, 2012

தன்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் கல்வி நிறுவனத்தில் பணி


தன்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பதிவாளர் மற்றும் உதவி பதிவாளர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துணை பதிவாளர்: அங்கீகாரம் பெற்ற முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 9 வருட உதவி பேராசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவி பதிவாளர்: அங்கீகாரம் பெற்ற முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 8 வருட மேற்பார்வையாளர் பணிஅனுபவம் அல்லது அதற்கு இணையான பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை கல்வி நிறுவன இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.100 வரைவோலை எடுத்து அத்துடன் ரூ.50-க்கான தபால் முத்திரை ஒட்டி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களை அறிய http://ismdhanbad.ac.in/noticeboard/recruitment.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Email PrintDelicious

No comments:

Post a Comment