Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, September 9, 2012

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு பாதுகாப்பு அலுவலர் பணி

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு பாதுகாப்பு அலுவலர், சமூகப் பணியாளர், கணக்காளர், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator), தகவல் பகுப்பாளர் (Data analyst), புறத்தொடர்பு பணியாளர் (Out Reach Worker) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்த விவரங்களை கண்காணிப்பாளர், அரசினர் மகளிர் காப்பகம், 27, ரோசரி சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற செப்டம்பர் 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment