Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Friday, September 14, 2012

அரசு வேலை வாய்ப்புகங்களில் பதிவு செய்து, 2008 - 2010ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அரசு மறு வாய்ப்பு

அரசு வேலை வாய்ப்புகங்களில் பதிவு செய்து, 2008 - 2010ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அரசு மறு வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி, இன்று முதல் அக்டோபர் 18ம் தேதிக்குள், வேலை வாய்ப்பகங்களுக்குச் சென்று தங்களது விடுபட்ட வேலை வாய்ப்பகப் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று வேலை வாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

Thursday, September 13, 2012

சென்னையில் இயங்கி வரும் TIDEL PARKல் பணி


சென்னையில் இயங்கி வரும் TIDEL PARKல் காலியாக உள்ள Technical Assistant, Store Keeper பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பணி: Technical Assistant
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணி: Store Keeper
கல்வித்தகுதி: ஏதாவதொரு இன்ஜினியரிங் பிரிவில் டிகிரி அல்லது டிப்பளமோ அல்லது மெட்ரீயல் மேனேஜ்மென்டில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட இரு பணிகளுக்கும் மாதம் ரூ. 20.000
வயதுவரம்பு: 01.09.2012 தேதிப்படி 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை 20.09.2012-க்குள் அனுப்ப வேண்டும்.
தங்களைப்பற்றிய பயோ-டேட்டாவை அனுப்ப வேண்டிய முகவரி: The Managing Director, TIDEL Park Limited, 1st Floor, ''A'' Block, No: 4, Rajiv Gandhi salai, Taramani, Chennai - 600113
மேலும் முழுமையான தகவல்களை அறிய www.tidelpark.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இ-மெயில் முகவரி: tidel@vsnl.com

பொதுத்துறை நிறுவனமான இந்திய POWER GRID கழகத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் பணி


பொதுத்துறை நிறுவனமான இந்திய POWER GRID கழகத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Trainee (Electrical)
கல்வித்தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு துறைகளில் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பி.இ., பி.டெக் அல்லது பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவுகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் AMIE படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 24,900 - 50,500
வயதுவரம்பு: 28 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிகளின்படி உச்ச வயதுவரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: GATE -2013 தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் குழு விவாதத்திற்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி நடைபெறும் GATE -2013 தகுதித்தேர்வில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
GATE -2013 தகுதித் தேர்விற்கான முழு விவரங்களையும் www.gate.iitb.ac.in/gate2013 என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: www. powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2013-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www. powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.