மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான யுனைடெட் வங்கியின் கொல்கத்தா கிளையில் காலியாக உள்ள கிளார்க், அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Officer (Post Code:01)
காலியிடம்: 05 ( கால்பந்து -2, கிரிக்கெட் - 2, டேபிள் டென்னிஸ் -1)
சம்பளம்: ரூ. 14,500 - 25,700
வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பல்கலைக்கழக பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட விளையாட்டில் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் 19 - 22 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய அணியில் விளையாடி இருக்க வேண்டும். விளையாட்டு துறையில் உயரிய விருதுகளான அர்ஜூனா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது ஆகிய விருதினை பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பணியின் பெயர்: Clerks (Post code: 02) clerical cadre
காலியிடம்: 15 ( கால்பந்து -15, கிரிக்கெட் - 6, குத்துச்சண்டை - 1, மல்யுத்தம் -1, ஒட்டப்பந்தயம் - 1)
சம்பளம்: ரூ. 7, 200 - 19, 300
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் சம்மந்தப்பட்ட விளையாட்டில் மாநில அளவில் அல்லது பல்கலைக்கழக அளவில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது மாநில அளவிலான ஜூனியர் விளையாட்டு போட்டிகள், இந்திய விளையாட்டு சம்மேளனம், கிரிக்கெட் வாரியம் போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் விண்ணப்பதாரர்களின் விளையாட்டு தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு போன்றவை 01.08.2012 தேதிப்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: Post Code:01-க்காண பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.400, Post code: 02-க்கான பணிக்கு ரூ.200. கட்டணத்தை United Bank of India வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணமாக செலுத்தவும், பணம் செலுத்துவதற்கான செல்லானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 14.09.2012
விண்ணப்பிக்கும் முறை: www.unitedbankofindia.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தேவையான் சான்றிதழ்களின் நகல்கள் அனைத்தையும் அட்டெஸ்ட் பெற்று அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 29.09.2012
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Assistant General Manager(H.R.M), United Bank Of India, Head Office, H.R.M. Department, United Tower, 12th Floor, 11, Hemanta Basa Sarani, Kolkata - 700001.
மேலும் விவரங்கள் அறிய www.unitedbankofindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment