Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Monday, September 10, 2012

மத்திய அரசின் வணிகத் துறையின் கீழ் இயங்கும் குண்டூர் புகையிலை வாரியத்தில் பணி

மத்திய அரசின் வணிகத் துறையின் கீழ் இயங்கும் குண்டூர் புகையிலை வாரியத்தில் காலியாக உள்ள கிளர்க் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: LDC (11இடங்கள்)
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் Lower Grade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிமிடங்களுக்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.
வயது: 2012 செப்டம்பர் மாதம் 30 வயத்திற்குள் இருக்க வேண்டும். எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரினருக்கு 3 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பொதுப்பிரிவினர் ரூ.100, Secretary Tobacco Board. Guntur என்ற பெயரில் டிடியாக எடுக்க வேண்டும். (எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது).
விண்ணப்பிப்பவர்கள் ஏ4 அளவுத்தாளில் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி விண்ணப்பித்து முழு விவரம் அடங்கிய சுயவிவரம், இத்துடன் நிரந்திர முகவரி, கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு பதிவு எண் போன்றவை இணைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் அஞ்சல் உறையின் மீது Lower Division Clerk என்று குறிப்பிட வேண்டும்.
செப்டம்பர் 21ம் தேதிக்குள் Secretary, Tobacco Board, Post Box No.322, Srinibasarao Thota, G.T Toad. Guntur - 522 004, AP என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment